அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று நடுக்கடலில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Hawai மாநிலத்தில் உள்ள Honolulu கடற்கரையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. Honolulu விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 737 சரக்கு விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானிகள் உடனடியாக விமானத்தை Honolulu விமான நிலையத்திற்கு திருப்ப முயன்றுள்ளனர்.
ஆனால், விமான நிலையம் வரை செல்ல முடியாததால் கடலிலே விமானத்தை தரையிறக்கியுள்ளனர்.
விமானம் கடலில் மூழ்கிய நிலையில், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறி தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு ஹெலிகாப்டருடன் விரைந்த அமெரிக்க கடற்படை, உயிருக்கு போராடிய விமானிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு திரும்பியுள்ளன.
கடலில் தத்தளித்த விமானிகளை ஹெலிகாப்டரில் மீட்ட காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது.

