நடிகை டாப்சி புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் எனப் பெயரிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ëசினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன்.
எனது 11 வருட சினிமா வாழ்க்கையில் இரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளார். என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்í எனத் தெரிவித்துள்ளார்.