பாலிவுட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவான் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிய படம் பேபி ஜான். படம் கலவையான விமர்சனத்தை பெற்றதோடு, வசூலிலும் அடிவாங்கி வருகிறது.
படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட வருண் தவான், காதல் பிரபோஸ் செய்த நடிகையை நீராகரித்ததால் அடிவாங்கியதாக கூறியிருக்கிறார்.
அதில், நடிகை ஷ்ரத்தாவின் அப்பாவும் என் அப்பாவும் எங்களை ஷூட்டிங்கை பார்க்க அழைத்து வருவார்கள். அந்த சமயத்தில் தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு வயது 8.
அவள் என்னிடம் ஒருமுறை என்னை காதலிப்பதாக கூறினாள். ஆனால் நான் அவரின் காதலை ஏற்க மறுத்துவிட்டேன்.
பின் இரு ஆண்டுகளுக்குப்பின் ஷ்ரத்தா தனது 10வது பிறந்தநாளுக்கு என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். பார்ட்டி முடித்துவிட்டு கிளம்பும்போது 3 அல்லது 4 சிறுவர்கள் என்னிடம் பேசி ஷ்ரத்தாவை மிகவும் பிடிக்கும். நீ ஏன் அவர் காதலை ஏற்கவில்லை என்று கேட்டனர்.
எனக்கு பெண்கள் மீது ஆர்வமில்லை, நான் ஒரு நடனப்போட்டியில் வெற்றிபெற வந்துள்ளேன் என்று கூறிவிட்டேன். உடனே அவர்கள் நான் சொன்னதை கேட்டு கோபமடைந்து என்னுடன் சட்டையிட்டு என்னை அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து ஷ்ரத்தாவும் அடித்தாள் என்று சிரிப்புடன் இந்த சிறுவயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.