தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
நடிகர் விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்று பல ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.
கோரிக்கை வைத்த ரசிகை
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ரசிகை ஒருவர் நடிகர் விஜய்யை நேரில் காண நீலாங்கரையில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டின் வாசலில் நின்று கொண்டு CCTV கேமராவில் விஜய் அண்ணாவை பார்க்க வேண்டும் என கண்ணீர்விட்டு அந்த ரசிகை அழுகிறார். அந்த வீடியோ கூட தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட தன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட குழந்தையுடன் வீடியோ காலில் பேசினார்.
அந்த வகையில் தன்னை பார்க்க தனது வீட்டின் வாசல் வரை வந்து, கோரிக்கை வைத்துள்ள ரசிகையை விஜய் சந்திப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த வீடியோ..
50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா