நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்களை நிறைவு செய்துள்ளனர்.
இருந்த போதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
மாறாக மகன்கள் தொடர்பான விழாக்களில் மட்டும் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியாக கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பர மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “ கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாததால், கடந்த 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 2 ஆவது தடவையும் தனுஷ்- ஐஸ்வர்யா ஆஜராகாததால் நீதிமன்றம், எதிர்வரும் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இவர்களின் இந்த செயல் வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தனுஷ்- ஐஸ்வர்யா சேர்வதை தான் அவர்களின் குடும்பத்தினரும் விரும்புவதாக கூறப்படுகின்றது.