பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிப்புச் சம்பவங்கள்
மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையை அண்மித்துள்ள பகுதியில் சில எரிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதிலிருந்து வெளியான புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.