குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பரவிவரும் ஒருவித தோல் தடிமன் நோயால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பரவிவரும் இந்த வைரஸ் தோல் நோயால் குஜராத்தில் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
ஜாம் நகரில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் பணியை மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் நேரில் பார்வையிட்டுள்ளார்.
இந் நோய் பரவிவரும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு 28 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன