ஜோதிடத்தின் படி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி தான் சனி பகவான். இந்த சனி பகவானை நீதிமான் என்றும் அழைப்பர்.
ஏனெனில் இவர் ஒருவரது கர்மாவிற்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைப்பவர்.
இந்த சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர் நல்ல பண வரவைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறுவார்.
அப்படிப்பட்ட சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனி வக்ரமாக இருப்பதால் பல ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மந்த நிலையையும், பணப் பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.
ஆனால் இந்த சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள்.
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் முதல் தங்கள் துறைகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
தன்னம்பிக்கை நிறைந்து இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம்.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
முக்கியமாக நவம்பர் முதல் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
மகர ராசியின் அதிபதியான சனி பகவான் 2 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் முதல் திடீர் பணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றித் தருவதாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனை சனி பகவான் பெற வைப்பார்.
ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் முதல் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
பணிபுரிபவர்களின் செயல்திறன் மேம்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் உதவ முன்வருவார்கள்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வேலை இல்லாதவர்கள் நவம்பர் மாதத்தில் முயற்சித்தால் சனி பகவானின் அருளால் எதிர்பார்த்த வேலையைப் பெறலாம்.