கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்இ மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியை கடக்க முயன்ற மூன்று பெண்களும் விபத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மத நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த காரின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.