இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் ரோஹித் சர்மா தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பகலிரவுப் போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் பகலிரவுப் டெஸ்ட் போட்டி என கூறப்படுகிறது.
இதன்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.