2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
10வது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நடைபெறுகிறது.
காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர். 8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.