இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தேர்தலின் போது வாக்களர்கள் தமது வாக்கினை பயன்படுத்தியதை குறிப்பதற்கு பாவிக்கப்படும் அழியாத மை மற்றும் பேனா, பென்சில், கார்பன் பேப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் வாங்குவதற்கான ஏல அழைப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த ஏலத்தை ஓகஸ்ட் 2ஆம் திகதி திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.