தற்போது புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் அடுத்த அரசியல் சக்தியை உருவாக்குவது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கான இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது கடந்த 2023.11.15 ஆம் திகதி பிற்பகல் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளதுடன், அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
இதற்காக, புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த சந்திப்பில் புதிய அரசியல் சக்தி தொடர்பான பல இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனவரியில் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது என்ற முடிவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.