காலி முகத்திடலில் நாளை (09) நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்த போராட்ட களத்தில் கூட்டம் இருந்த கூட்டத்தையும் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் அவதானிக்குமாறும் கூறினார்.
இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 9 ஆம் திகதி, இந்த மண்ணில் இதுவரை நடத்திய போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் நாளை இதை நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.