நாட்டில் நிலவும் அரசியல் முடக்கம் மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும், தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே தமது முதன்மையான நிபந்தனை என்று அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள் தயாராக இல்லை என்றால், இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பு! இடைக்கால நிர்வாகத்தை அமைக்க தயார்! ஏனையக் கட்சிகளில் ஆதரவளித்தால்………
நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த அரசியல் முடக்கத் தன்மையை போக்கி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் வரையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்
மக்களின் விருப்பத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.