நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது