இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொது மகன் ஒருவர் “தென் செபத” என்று நேரடியாக கேட்டுள்ளார்.
இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. கடந்த தேர்தல்களின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் பயன்படுத்தப்பட்ட “அபி தமய், ஹொந்தடம கரளா தியன்னே” மற்றும் “தென் செபத?” ஆகிய வாசகங்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
நாடு தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், மக்கள் எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. சமகாலத்தில் மக்கள் அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறனர்.
இதனால் அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக “அபி தமய், ஹொந்தடம கரளா தியன்னே” மற்றும் “தென் செபத?” ஆகிய வாசகங்களை மக்கள் தற்போ அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறிய போது பொது மகன ஒருவர் “தென் செபத” என்று நேரடியாக கேட்டுள்ளார். இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது