நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் வேகத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது- பொதுமக்களின் அலட்சியமும் முதன்மையான காரணங்களில் ஒன்று.
தொற்று பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரகசியமாக மங்கள நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, ஆலய திருவிழாக்களை நடத்துவது போன்ற சம்பவங்கள் தொற்று பரவலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதேபோல, தென்மராட்சி பிரதேசத்தில் பொதுமக்கள் சிலரின் விழிப்புணர்வற்ற நடவடிக்கையால் பலர் தாமாகவே வலிந்த தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் அண்மையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார், அவர் தென்மராட்சி பகுதியை சேர்ந்தவர். ஊருக்குள் பரிச்சயமானவர். எல்லோருக்கும் உதவும் மனமுள்ளவர்.
அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 3 நாட்கள் வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்தவர், விடாமல் தொடரவே, பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொற்று உறுதியானது.
தென்மராட்சியின் சில பகுதிகளில் அண்மையில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டவர். அந்த பகுதியில் தொற்றிற்குள்ளானவர்களிடம் தடமறியும் விசாரணை நடத்தியதிவ், பலரும் அந்த காய்ச்சல்க்காரரை பார்க்க சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.
எல்லோருக்கும் உதவும் மனமுள்ளவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரை பார்க்க சென்றதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
அவரை சுகம் விசாரிக்க சென்றவர்கள், அவர்களது உறவினர்கள் என சுமார் 25 பேர் வரையில் தொற்றிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.