சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று முற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தலைமை தாங்கினார். அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதேசமயம் சுயாதீன அணிகளின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதன்போதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.