நாம் தூங்கும் போது மொபைல் போனை நமக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்து படுக்கக்கூடாது… அது ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இவை ஆபத்தானது என்றும் தெரிந்தும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தும் வருகின்றனர்.
மேலும் தூங்கும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு தூங்குவது பல ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நபர்கள் காலையில் எழுந்ததும், தொலை பேசியை பார்த்து நாளை தொடங்குவது மட்டுமின்றி சாப்பிடும் போது, தூங்கும் போதும் தொலைபேசியை விடாமல் பற்றிக் கொள்கின்றனர்.
தூங்கும் போது மொபைல் போனை 90 சதவீத இளைஞர்களும், 68 சதவீதம் பெரியவர்களும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதாக WHO எச்சரித்துள்ளது.
மொபைல் போனின் கதிவீச்சு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஆதலால் 3 அடி தூரத்தில் வைத்து தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
மொபைல் வெளியிடும் ரேடியோ அலைவரிசை மின்காந்த ஆற்றலைக் குறைக்கிறது.
மொபைல் போன்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் மற்றொரு ஆபத்து என்னவென்றால், மொபைல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சு தசை வலி மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும்.
மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களை சீர்குலைத்து தூக்கத்தையும் கெடுக்கின்றது.