யாழ்ப்பாணம் இல. 100 நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அருளையா அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நல்லதம்பி(நகைக்கடை உரிமையாளர்), சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மகளும்,
தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அருளையா (ஹொரணை அருளன்ஸ். சாறி எம்போரியம், மானல் இன்டஸ்ரீஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரோகிணி (வதனி, கொ/ விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்-வயலின் ஆசிரியை), துஷ்யந்தி (லண்டன்), ராகவன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யசோதரன் (ஆசிரியர்- கிங்ஸ்ரன் சர்வதேச பாடசாலை முகத்துவாரம்), தர்மராசா (லண்டன்), சரண்யா (Software Architect) ஆகியோரின் மாமியாரும்,
அக்ஷயன், ஹரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கமலாம்பிகை, மகேஸ்வரி, ஆறுமுகம், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி, துரைராஜா, அன்னலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, கணேசன், செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.