யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் பார்த்தீபன் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பரராசசிங்கம் சிவஇன்பநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
இன்பரதி, பரந்தாமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜான் பாப்டிஸ்ட், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வலம்புரி அவர்களின் பாசமிகு மாமாவும்,
நாவலன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற சிவநாதன், சபாநாதன், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, செல்வரதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், பழனிவேல் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.