கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் ஸ்கந்தகுமார் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொடிகாமம் பொன்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(ஆசிரியை) அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிறீநவரட்ணராசா, சிறீரங்கராசா மற்றும் சிறீவிஷ்ணுகுமார்(இலங்கை), ரவிசந்திரிகா(கொழும்பு), ரேணுகாதேவி(புளியங்குளம்), லலிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜகோபன்(கோபன்), கஜவதனன்(கஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெரன், ஜேடன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.