யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரத்சந்திரபோஸ் ஜெயரூபன் அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சரத்சந்திரபோஸ்(ரக்ரர் கட்டி) தனலட்சுமி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆனந்தகிருஷ்ணன்(குட்டி) அருந்தவராணி(பொண்ணா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷன்(தனுஷ்), திலக்ஸ்சிகா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலரூபன், குகரூபன், பகீரதி, விஸ்வரூபன், ஜெயபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரத்தினம்(கார்கார பெத்தையா) அவர்களின் அன்பு மருமகனும், கௌசீகரன் அவர்களின் அன்புச் சகலனும்,
நிகல்யா(சிந்து- லண்டன்), மயூரன்(பிரான்ஸ்), ஆனந்தகோடி, நந்தினி, லலிதா, சிந்து, சிந்துஜன், சபேசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.