யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், Bahrain ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் குகதாஸ் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம்(சின்னையா ஆசாரி), மனோன்மணி தம்பதிகளின் அன்பு புத்திரரும்,
புஸ்பராணி(சந்திரா), காலஞ்சென்ற தவமணிதேவி(தவம்) மற்றும் சகுந்தலா(சசிலா), சண்முகதாஸ்(ராசன்), மணிமேகலை(மஞ்சு- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சண்முகநாதன், சரவணபவன், காலஞ்சென்ற குணானந்தசீலன்(சீலன்), சசிகலா(கலா), புவிச்சந்திரன்(ராயு- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்யந்தி(விஜி- பிரான்ஸ்), சதீஸ்காந்(கட்டார்), உஷாந்தி, நிலக்ஷன்(அவுஸ்திரேலியா), கோபிகா, தீபிகன், சாயித், ஆதியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாயீஷன், கஜனிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
விஜேந்திரன்(பிரான்ஸ்), மயூரன், கபிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.