யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசவ்வீன் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 13-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(ராசு மாஸ்ரர் – புனித ஹென்றியரசர் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேரியம்மா எட்வேட்(கொழும்பு), காலஞ்சென்ற ஜெவபாக்கியம் யோசவ், யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பியோனா அருந்ததி(றாஜி- நோர்வே), ரைற்றஸ் பாரதிராஜ்(ஜேர்மனி), ரைற்றஸ் திலகராஜ்(ஜேர்மனி), கனிஸ்ரஸ் பாபுராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறிஸ்ரி ஜெயராஜ், மொனிக்கா ரைற்றஸ், கிறிஷாந்தி திலகராஜ், மெலானி பாபுராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொயிஸ்ரன், நவீன், ஜெனிவா, றொட்னி, ஸுரீவ், அஜே, றியோன், டெறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.