திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், சென்னை தமிழ்நாட்டை வதிவிடமாகவும் கொண்ட சுந்தராம்பாள் குணநாயகம் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குணநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சச்சிதானந்தம்(இந்தியா), அரியநாயகம்(இலங்கை), புலேந்தியம்மான்(லெப்.கேணல் புலேந்தி- மாவீரர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி), தவேந்திரன்(பெல்ஜியம்), வினோத்(லண்டன்), லதா(ஜேர்மனி), பாபு(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரி, சகுந்தலாதேவி, சுபாசினி, சசிலா சுபா, மனோ, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காந்தன், கமல், நோனா, நவீன்குமார், தர்ஷினி, சர்மிளா, சாலினி, அர்ஜுன், அருண், தர்மசீலன், சங்கீதா, தவேந்தினி, சங்கர், கிருபனா, செழியன், சீராளன், சுகந்தன், தூயவன், திவ்யபிரகாஷ், கோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிஷிக், கௌஷிக், அதர்வா, நிவேத்வா, பிரபிஸ்வா, ஷவிஷ்கா, அசர்ஐசாக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.