இந்தியா தமிழ்நாடு தட்டப்பாறையைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, மட்டகளப்பு, கொழும்பு, சம்பியா Lusaka, தென்னாபிரிக்கா Transkei, கனடா Toronto ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட
சிவநேசச்செல்வியம்மை சந்திரசேகரம் அவர்கள் 25-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr குழந்தைவேலு பத்தினியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வெள்ளைய முதலியார் எல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் (ஓய்வபெற்ற ஆசிரியர் கனடா) அவர்களின் அருமை மனைவியும்,
Dr சேயோன், சசி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
புனிதவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி(இலண்டன்), Dr.சிரேஷ்டராஜா (தென்னாபிரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறிஸ்னி, சவிற்றா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், மாணிக்கவாசகர் மற்றும் திலகவதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ் சென்றவர்களான சிவராமலிங்கம், Dr.சிவபாதசுந்தரம், சோமாஸ்கந்தசிவம் ஆகியோரின்உடன்பிறவாச் சகோதரியும்,
Dr உமாபதி அவர்களின் ஆசைச் சித்தியும்,
விசாகன் அவர்களின் ஆசையம்மாவும்,
மகேஸ்வரி தங்கராசா, மீனா சிவகுருநாதன், உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசாகரன், குமுதினி பாஸ்கரன், பவானி தேவானந், Dr பரதன், சேதுபதி பகீரதன், ஆதி தற்பரானந்தன் ஆகியோரின் ஆசையத்தையும் ஆவார்.