31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான, இந்தப் பெண் அவரது துணைவனால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று 18ர்30 அளவில், இந்தப் பெண்ணை, 41 வயதுடைய இவரது துணைவன் காலில் பிடித்து நடு வீதிக்கு இழுத்து வந்துள்ளான். அந்தச் சமயத்தில் அந்தப் பெண் உயிருடன் தான் இருந்துள்ளார். வீதிக்கு இழுந்து வந்து அவர் மீது பெற்றோலினை ஊற்றிப் பற்ற வைத்துள்ளான்.
அந்த இடத்திலேயே இந்தப் பெண் எரிந்து சாவடைந்துள்ளார்.
இந்தப் பெண்ணுடன் இவனிற்கு 3, 7, 11 என்ற வயதுடைய மூன்று பிள்ளகைள் உள்ளனர். ஏற்கனவே இவன் மீது மனைவியை அடித்துத் துன்புறுத்திய வழக்கு உள்ளது.
தீவைத்து விட்டுத் தப்பியோடிய இவனைக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் 90 பெண்கள் குடும்ப வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். மாறாக இது 2019 இல் 146 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.