ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, தமது உறுப்பினர்கள் அனைவரும் சுயாதீனமாக செயற்படப்போவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ உட்பட்ட ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் 25 உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தனித்து செயற்படப்போவதாக அறிவித்தனர்