ஒருவரது ஜாதகம் நல்ல ஜாதகமா? ஏதாவது குறை இருப்பதா? என்பதை கிரகங்களின் இருப்பை வைத்து கண்டுபிடித்துவிடலாம். குறிப்பாக மனதை அலைபாய வைக்கும் அறிகுறிகளை சில கிரகங்களின் நிலை மூலம் கண்டுபிடித்துவிடலாம். உதாரணத்திற்கு பெண்ணின் ஜாதகத்தில் 7-இல் சூரியன் இருந்தால், மனது அலைபாயும் எண்ணத்தோடே சுற்றுவார்களாம். 7-இல் சூரியனோடு வேறு ஏதாவது கிரகம் இருந்தால் எந்த பிர ச்சனையும் இருக்காது.
7 இல் சூரியன் இருப்பதை எப்படி கணக்கீடுவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். பொதுவாகவே ஜாதகத்தில் லக் என குறிப்பிட்டிருக்கும் லக்னத்தில் இருந்து கடிகார திசையில் கணக்கிட வேண்டும். இப்போது லக்னம் கட்டம் என்பது ஒன்று என்றால், அதிலிருந்து எண்ணிக்கொண்டே வரவேண்டும். ஏழு எனும் கட்டம் வரும்போது, அந்த இடத்தில் சூரியன் தனித்திருந்தால் மனதை ஒரு இடத்தில் கட்டுப்படுத்த தெரியாதவராக இருப்பார்கள். அதுவே சூரியனோடு வேறு ஏதாவது கிரகம் இருந்தால் ஓரளவு தணிக்கப்பட்டுவிடும்.
அப்படியே எண்ணிக்கொண்டு வரும்போது, அடுத்து பத்தாவது இடத்தில் குரு இருந்தால் தொழில் அமோகமாக இருக்கும் என்பார்கள். ஒருவருக்கு கீழே பணி செய்தாலும் சரி, சொந்த தொழில் செய்தாலும் சரி பணம் கொட்டும். அதுவே 11-வது கட்டத்தில் ஏதாவது கிரகம் இருந்தால், சம்பாதிக்கும் பணத்தை நல்லாவே சேமிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் 7-இல் சூரியன் தனித்து இருந்தால், உடனே பரிகாரம் செய்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இல்லையெனில் என்னவாகும் என்றால், திருமணத்திற்கு வரன் பார்க்கும் இடத்தில் ஜாதகத்தை பார்ப்பவர்கள் பெண் ஜாதகம் என்றால் ஏழில் சூரியன் உள்ளது பார்த்து பண்ணுங்க. பெண்ணிற்கு அலைபாயும் மனசு என்பார்கள்.
அலைபாயும் என்றால் எதிர்பா லினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு மட்டும் கிடையாது. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அது வாங்கலாமா? இது வாங்கலாமா? ஒருவேளை செய்து முடிக்காமலே அது செய்யலாமா? இது செய்யலாமா? என மனதை ஒரு இடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். என்னதான் நல்ல பெண்ணாகவோ நல்ல ஆண்மகனாகவோ இருந்தாலும், மனதை கட்டுப்படுத்த மாட்டார்கள் என ஜோதிடர்கள் பொதுவாக கூறுவதை, நாம் எதிர்பா லினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் மனதை கட்டுப்படுத்துவது என்பது எல்லா விஷயத்திலும் தான் வேண்டும் என்பதை நாம் யோசிக்க மாட்டோம். ஆக ஜோசியரிடம் கேட்கும்போது விவரமாக விசாரியுங்கள்.
திருமண பெண்ணை கட்டுபடுத்த முடியாதாம்! தள்ளிப் போகும் திருமணம்! தவிக்க வைக்கும் கட்ட அமைப்பு!
Previous Articleசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் !
Next Article கணவன் மனைவி உறவில் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களா