கனடாவிலிருக்கும் இளைஞனை திருமணம் செய்துகொண்டு சென்ற வவுனியாப்பெண்ணால் ஒரு குடும்பமே நிம்மதி இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனடாவாழ் இளைஞனை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் முடித்து கனடா சென்றுள்ளார்.
ஆனால் தற்போது அவரிடம் விவாகரத்து பெற்று வவுனியாவிலிருக்கும் தனது பல வருட காதலனை கனடாவிற்கு எடுக்க முயற்சித்து வருகிறார். மேலும் மணமுடித்து சென்ற இளைஞனின் சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இன்று குறித்த யாழ். இளைஞனும் அவரது குடும்பமும் பரிதவித்து நிற்கின்றனர்.