தமிழகத்தில் திருமணமான பெண்ணையும் அவரின் குழந்தையையையும் கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (24). இவர் கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் (32) என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால், 2018ல் காசிராஜாவிற்கு, கலைச்செல்வியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தை இருந்தது.
அதன் பின்பும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொடர்பில் இருந்து உள்ளார்; அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார்.
கடந்த, 2020 மார்ச்சில், கணவருடன் தகராறு செய்து, புதுப்பட்டியில் தந்தை வீட்டில் தங்கினார். அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். அவருக்கு ஏற்கனவே மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி மனைவி, குழந்தைகளை வெளியே அனுப்பிய சிலம்பரசன், கலைச்செல்வியை, குழந்தையுடன் சின்னமனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான்.
பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனை கத்தியை கொண்டு வர கூறி கத்தியால் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி சதை, எலும்பு என பிரித்து, சாக்கு மூட்டைகளில் கட்டி குளத்தில் வீசியுள்ளனர்.
இதற்கிடையே, கலைச்செல்வியை காணவில்லை என அவர் தந்தை கருப்பையா தொடுத்த புகாரையடுத்து பொலிசார் செய்த விசாரணையில் சிலம்பரசன் சிக்கினார்.
இதையடுத்து சிலம்பரசன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுவனை கைது செய்தனர். உடல் எலும்புகள் அடங்கிய சாக்கு மூட்டையைக் கைப்பற்றி, தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.