தமிழகத்தில் காதலித்த இளைஞனுடன், மகளை தாய் அனுப்பி வைத்ததால், கடும் கோபமடைந்த கணவன் அவரை தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்தின் அருகில் இருக்கும் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23-ஆம் திகதி சடலம் ஒனறு எரிந்து கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விரைந்த வந்த பொலிசார் உடலை பார்ப்பதற்குள் முகம் முற்றிலும் கருகி போயுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயம் இருந்துள்ளது.
அதன் பின் பொலிசார், அந்த உடலை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்தது ஒரு .பெண் என்பதும், அவர் தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ரவுடி முனியசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த தம்பதியின் மகளான வெங்கடேஸ்வரி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 26 ஆம் திகதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் வெங்கடேஸ்வரி காதலித்த நபருடன் அவருடைய தாய் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள, முருகலட்சுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு முருகலட்சுமியின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட, பொலிசார் தலைமறைவாக இருந்த முனியசாமியை தேடியுள்ளனர்.
அவரைப் பிடித்து விசாரித்த போது, மகளின் காதலை சேர்த்து வைத்த முருகலெட்சுமியை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இளைஞரை காதலிப்பது அவருக்கு தெரியவந்ததால், முனியசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.
குற்ற வழக்குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இளைஞரை மாப்பிள்ளையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது அவரது மனைவி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே கணவனுக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ரவுடியாக இருக்க வேண்டுமா? என முருகலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் தான், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மாணவரை அழைத்து பதிவு திருமணம் செய்வதற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே இந்த கொலை சம்பவத்தை முனியசாமி செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முனியசாமியின் கூட்டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.