பொதுவாக எல்லா ஆண்களுக்குமே, கல்யாணமாகும் வரை மட்டுமே கைப் பழக்கத்தின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். கல்யாணமாகிவிட்டால், படிப்படியாக அப்பழக்கம் குறைந்து, தாம்பத்திய சுகத்தை மனைவியிடம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். கல்யாணமான பிறகும் ஒரு ஆண் கைப் பழக்கத்தை தொடர்கிறான் என்றாலே, ஏதோ ஒரு வகையில் சிக்கல் இருக்கிறதென புரிந்துகொள்ள வேண்டும். கல்யாணத்திற்கு முன்பு, அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதந்து இன்பம் கண்டவர்களுக்கு, சில நேரம் மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் போதும், அது கசக்கும்.என்னுடைய அலுவலக நண்பருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. எனக்கு கைப் பழக்கம் இருப்பது குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, “தினம் தினம் செய்து பழக்கப்படுத்திக்கொள்ளாதே. ஒரு கட்டத்தில் திருமணமான பிறகு உன் மனைவியை திருப்தி படுத்த முடியாத நிலை கூட வரலாம்” என்றார். அவர் சொன்ன பிறகும் அதிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. அப்போதே புரிந்துவிட்டது எந்த அளவிற்கு அப்பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறேன் என்று.எவ்வளவு மனம் இறுக்கம் இருந்தாலும், கைப் பழக்கம் செய்யும் போது ஒருவித மனநிறைவு கிடைக்கும் என்றாலும், ஒரு கட்டத்தில் அந்த உணர்வு திரும்ப திரும்ப செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். மூளையில் ஒரு வித ஹார்மோன் சுரந்தால் மட்டுமே அந்த நாள் நிறைவு பெற்றது போன்ற ஃபீல் வரும். எல்லாமே எனக்கு தெரிகிறது. ஆனாலும் இன்னும் அப்பழக்கத்தை தொடர்கிறேன். இது கல்யாணத்திற்கு பிறகு தொடர்ந்தால், கைப் பழக்கம் போல சில நிமிடங்களில் இன்பம் அனுபவிக்க மூளை ஏங்கும்.ஆனால் தாம்பத்திய உறவு அப்படிக்கிடையாது. சில மணி நேரங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். சில நிமிடங்களில் இன்பத்தை பார்த்து பழகிய உடல், மனைவியிடம் உறவில் ஈடுபடும் போதும் அதே போல நடக்க வேண்டுமென தூண்டுவதால், திருப்தி கிடைத்தாலும், எதையோ இழந்தது போல மனம் உருவகப்படுத்திக்கொள்ளும். முடிந்த வரையில், திருமண பேச்சு தொடங்கிவிட்டாலே, கைப் பழக்கத்தை மெல்ல மெல்ல குறைக்கும் பயிற்சியை மேற்கொண்டால், திருமணத்திற்கு பிறகான உறவு சொர்க்கம் போல மாறிவிடும். தாம்பத்தியம் ஒரு வரம். அதனை தவற விடக்கூடாது.
திருமணத்திற்கு பிறகும் தவறான பழக்கம் தொடர்ந்தால், மனைவியை சந்தோசபடுத்த முடியாதா?
No Comments2 Mins Read

