நாட்டில் பொருளாதார சிக்கல் மற்றும் எரிபொருள் சிக்கலால் பல்வேறு திருட்டுச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் திருகோணமலையில் வீடொன்றிலிருந்த மோட்டார் சைக்கிளொன்றில் இருந்து பெட்ரோல் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவமானது திருகோணமலை – வினாயகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மர்மநபர்கள் இந்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கையில் வீட்டில் உள்ள சிசிடிவி கெமரா மூலம் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டுச்சம்பவத்தை நான்கு பேர் சேர்ந்த குழுவால் இடம்பெற்றிருக்கின்றது என சிசிடிவி கெமரா மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கொதுமக்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவணத்துடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.