மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார்.
இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதினா எதிர்பார்ப்பு அளவுகடந்து இருக்கிறது.
சமீபத்தில் தான் லியோ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இனி மூன்று மாதங்களுக்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் என்று நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் லியோ ஷூட்டிங் கடைசி நாளில் திரிஷா, விஜய் இருவருக்கும் இடையே காமினேஷன் ஷூட் எடுத்திருந்தனர்.
இதையடுத்து படக்குழு, விஜய் உடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விஜய் திடீரென அவர்களுடன் புகைப்படம் எடுக்காமல் சென்றுவிட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.