திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேபுக்கு (Biplab Kumar Deb) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.தொற்று உறுதியானதை தொடர்ந்து தம்மை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிப்லாப் குமார் தேப் டுவிட் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

