யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினசரி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கமைய குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து 12.00 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ் – சென்னை விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.