ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது