மதுரையில் தாய் மற்றும் 9 மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அருளானந்தம்-சண்முகப்பிரியா ஆகியோர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு 9 மாதத்தில் மகிமா என்ற பெண் குழந்தை உள்ளது
மதுவிற்கு அடிமையான பிரான்சிஸ் தினந்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மகிமா,
உணவு ஒவ்வாமையால் நேற்று காலை உயிரிழந்த நிலையில் தாய் சண்முகபிரியா பிற்பகலில் உயிரிழந்துள்ளார்
இதனால் சந்தேகமடைந்த சண்முகப்பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தெப்பகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்