கொழும்பில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயது மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாடிக் கொண்டிருக்கும் போது மாணவனை மேலதிக வகுப்பிற்கு செல்ல தயாராகுமாறு தாய் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள் சென்று விபரீத முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.