இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார். மகன் வீடுவருவார் என யாழ்ப்பாணத்தில் காத்திருந்த சாந்தனின் தாயாருக்கு மகன் உயிரிழந்த சம்பவம் பேரதிச்சியாக உள்ளது.
32 ஆண்டுகளாக மகனின் வரவுக்காக அந்த தாய் விழிமூடாது காத்திருந்த நிலையில், விதி எனும் காலன் வந்து மகன் உயிரி எடுத்துசென்று அந்த தாய்க்கு மீளாத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் சாந்தனின் உயிரிழப்பு குறித்து அவரது சகோதரர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
தேசத்துக்காக பள்ளி வயதில் புறப்பட்ட ஆத்மா!
தேசத்துக்காகவே தன் உயிரை கரைத்துவிட்டான்!
வீடு வருவான் மகன் அவனுக்கு சத்துணவு பால்மாக்கள் எல்லாம் வாங்கி வைத்து காத்திருந்த அம்மாவுக்கு என்ன தான் சொல்ல முடியும்?
மகன் வருவான் என் கையால் ஒரு கப் தேத்தண்ணி நான் குடுக்க வேணும் எண்டு சன்நிதியானை வேண்டாத வேண்டுதல் இல்லை இந்தத் தாய்!
32 ஆண்டுகளாக ஒரு வேளை உணவுடன் தவமிருந்தாள் தேசத் தாய்!
என்ன தான் ஆறுதல் சொல்ல முடியும்?
அம்மா உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம். தேசக் காற்று வீட்டு முற்றம் வந்து வீசவில்லை! தேசத்துக்கான மூச்சாய் ஆகிப்போனது….. என பதிவிட்டுள்ளார் .