தாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தும் முகமாக எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தபோதும், எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்தே ஜனாதிபதி கேட்;டுக்கொண்டமைக்கு அமைய நிதியமைச்சு பதவியை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்
எனினும் இந்த பதவிக்கு உரிய ஒருவர் வருவாராக இருந்தால் தாம் விட்டுக்கொடுக்க தயார் என்றும் தமது நாடாளுமன்ற நிலையை விட்டுக்கொடுக்க தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள எவரும் வராதநிலையில் தாம் நிதி விடயத்தில் நிபுணத்துவம் கொண்டிருக்காதபோதும் தாய் நாட்டுக்காக தலையை வைத்தாவது சேவை செய்ய தயார் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்;.
ஜனாதிபதி இன்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய இந்த பணியை செய்கின்றபோது தாம் சமூக ஊடகங்கள் மத்தியில் வருகின்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரஜித் குமாரசுவாமி,சாந்த தேவராஜன் மற்றும் சாமினி குரே போன்ற நிபுணர்கள் அரசாங்கத்துக்கு உதவும் நிலையில் நிதியமைச்சர் பொறுப்பை தொடர தீர்மானித்துள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.