பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே அதிகமாக தர்பூசணி எடுத்து கொள்வோம்.
இந்த பழம் தினமும் எடுத்து கொள்வதால் உடலில் அதிக அளவு நீர்ச்சத்துக்கள் உருவாகின்றன.
மேலும் தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு இருக்கிறது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய உதவுகிறது.
தர்பூசணியை சாப்பிடும் போது எடை இழப்பு, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் பராமரிப்பு என அனைத்து பிரச்சினைகளும் சரிச் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் தர்பூசனி சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து சேர்த்து கொள்ளக் கூடாத உணவுகளை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாம் சாப்பிடும் பாலுடன் தர்பூசணியை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனின் இவை இரண்டும் எதிர்ப்பு பொருட்களாகும். மேலும் பாலில் கொழுப்பு, வைட்டமின் பி, புரதங்கள் உள்ளன.
மாறாக தர்பூசணியில் அமிலத்தன்மை உள்ளது இவை இரண்டும் வயிற்றில் சேர்ந்தால் வயிற்றுடன் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தர்பூசணியை சாப்பிட்ட பின்னர் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளக் கூடாது. காரணம், தர்பூசணியில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனால் புரத உணவுகள் சாப்பிடும் போது செரிமான நொதிகளின் உற்பத்தி பாதிக்கின்றது.
தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் சாப்பிட்டு அரைமணி நேரத்திற்கு பின்னர் எடுத்து கொள்ளலாம்.
முட்டை, தர்பூசணி இரண்டிலும் நார்ச்சத்து இருக்கிறது. மேலும் ஒமேகா 3 அமிலம் முட்டையில் அதிகம் இருக்கிறது.
இதனால் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியை சாப்பிடும் போது அது கடுமையான வயிற்று போக்கை ஏற்படுத்தும்.