தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார்.தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.
மேலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்துக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது விஜய் பற்றிய ஒரு உண்மையை கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்தேன். நான் விஜயை கல்யாணம் செய்ய ஆசைபட்டேன், ஏன் என்றால், நான் அவரது தீவிர ரசிகை.
அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. திருப்பாச்சி படத்தில் என் சகோதரி நடித்தார்.அப்போது விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.