இந்தியாவில் 22 வயது தலித் இளைஞனை உயர் சாதியைச் சேர்ந்த காதலியின் குடும்பத்தினர், அவரது அந்தரங்கப் பகுதியில் இரும்பு கம்பியை உட்புகுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் Lakhimpur Kheri-ல் உள்ள Tikunia டவுனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயர் சாதியினர் வாழும் பகுதி என சொல்லப்படும் Tikuniaவில், ஒரு குறு விவசாயியின் மகன் ஹரிந்த்ரா (22).
ஹரிந்திராவுக்கும் அப்பகுதியில் உயர் சமூகத்தினர் என சொல்லப்படும் பிரமதீன் என்பவரது மக்களுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று ஹரிந்திரா, பிரமதீனின் வீட்டுப் பக்கம் சென்றுள்ளார். அப்போது தன் மகளைத் தான் பார்க்க வந்துள்ளார் என நினைத்துக்கொண்டு பிரமதீன் அவரை பிடித்தது அடித்துள்ளார்.
அவருடன் ராஜு, பாரத் மற்றும் கஜ்ராஜ் எனும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து ஹரிந்திராவை பெல்ட், உருட்டுக் கட்டை என கிடைப்பதையெல்லாம் எடுத்து அடித்துள்ளனர்.
பின்னர், சாதியைக் குறிப்பிட்டு உடல் முழுவதும் கொடூரமாக தாக்கிய அவர்கள், ஹிரேந்திராவின் ஆசனவாய் பகுதியில் இரும்பு கம்பியை விட்டு, ஆணுறுப்பை மிதித்து துடிக்கத் துடிக்க துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் ரத்தக்களரியாக உடல்முழுக்க காயங்களுடன் வீட்டுக்கு சென்ற ஹிரேந்திராவைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் ஹிரேந்திரா மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மகன் தாக்கப்பட்டது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின்போது, தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினர், ஹிரேந்திரா தங்கள் வீட்டில் பொருட்களை திருட முயற்சித்ததாகவும், கையும் களவுமாக பிடித்ததாக அடித்ததாகவும் கூறியுள்ளனர்.