விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். இன்னும் 10 நாட்களில் விஜய்யுடைய காட்சிகள் நிறைவு பெறவுள்ளன.
அதன்பின் மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகள் முடிவுக்கு வந்தபின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெரும். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் துணை தயாரிப்பாளராக இருந்த லலித் குமார் லியோ படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை லியோ படம் ரூ. 400 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு முறை நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமாரை தன்னுடைய அலுவலகத்திற்கு 12 மணிக்கு வர சொல்லி இருக்கிறார். தயாரிப்பாளர் லலித் குமார் 12 மணிக்கு சென்ற நிலையில் விஜய் 12.10ற்கு அங்கு வந்துள்ளார்.
உள்ளே வந்தவுடன், 10 நிமிடம் தாமதமாக வந்ததற்கு லலித் குமாரிடம் விஜய் மன்னிப்பு கேட்டாராம். டிராஃபிக்கில் இருந்து வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது என கூறி விஜய் சார் எண்னிடம் மன்னிப்பு கேட்டார், அதுதான் அவருடைய மனசு என தயாரிப்பாளர் லலித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.