சமீப காலமாகவே Ajith ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முதல்வரில் தொடங்கி பிரதமர் வரை.. ஏன் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அதகளம் செய்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில், இது போன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த நபர்களிடம் வலிமை அப்டேட் பற்றி தயவு செய்து கேக்காதீர்கள் என அஜித் அறிக்கை விடும் நிலை உண்டானது.
இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் பிரமுகர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளை துவக்கி உள்ளனர். அதோடு பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளன. இந்நிலையில் தமிழக BJP தேசிய செயலாளர் வானதி சீனிவாசனிடம் அஜித் ரசிகர் ஒருவர், வலிமை படத்தின் அப்டேட் பற்றி ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ள Vanathi Srinivasan, ‘தேர்தலில் நான் ஜெயித்த உடன் நிச்சயமாக வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் தம்பி..’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டானது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் வானதி சீனிவாசன் BJP சார்பாக கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.