ஆண்டின் முதல் நாள் தொடக்கத்தில் நாம் செய்யும் தானங்கள் நம்மை மென்மேலும் வளர செய்யும். நமக்கு நாம் செய்து கொள்ளும் வேண்டுதல்களை விட மற்றவர்களுக்காக நாம் உதவும் செயல்களில் இறைவனை காணலாம் என்பது நியதி. இதைத்தான் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்ற பழமொழியும் கூறுகிறது. இவ்வகையில் தமிழ் புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய செயல்கள்? செய்யக் கூடாத செயல்கள்? செய்ய வேண்டிய தானங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது முறையாகும். அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும். அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு அனைத்து புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.
சித்திரை மாத பிறப்பு என்பதால் கோடை காலத்தின் துவக்கத்தில் இருக்கிறோம் எனவே கோடை காலத்திற்கு உகந்த தானங்களை எல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் செய்வது மிகவும் விசேஷமானது. தோஷங்கள் நீங்கி வாழ்வு மலர உங்களால் முடிந்த அளவிற்கு குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்ற விஷயங்களை எல்லாம் செய்யலாம். உங்கள் மூலம் தாகத்தை தீர்க்கும் விஷயம் நடைபெறும் பொழுது உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வையுங்கள்!
தமிழ் புத்தாண்டு அன்று செடிகளை நடுவதும், தியானங்கள் செய்வதும், தானங்கள் செய்வதும், இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும்.
அட்சய திருதியை போலவே தமிழ் புத்தாண்டு நன்னாளும் நமக்கு மென்மேலும் செல்வத்தை பெருக்கும் நாளாக அமைய இருக்கிறது. எனவே இந்த நாளில் நீங்கள் குரு ஓரை பார்த்து தங்க நகை வாங்குவது, சுக்கிர ஹோரை பார்த்து வெள்ளி நகை வாங்குவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்களால் முடிந்த எதேனும் ஆபரன அல்லது வெள்ளி நகைகளை வாங்கிக் கொள்ளலாம். அதுபோல கல்லுப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.
நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் உங்கள் வீட்டிலிருந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்து வாங்கும் பணத்தை உங்களுடைய கல்லாப்பெட்டி அல்லது பணம் வைக்கும் இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரம், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து வையுங்கள். இவ்வாறு செய்ய மென்மேலும் லாபம் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு அன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது.
அசைவம் சாப்பிடுவது, தீட்டுக் காரியங்கள் செய்வது, நகம் வெட்டுவதும், முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்ற கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்குவது செய்யலாம்! வீண் விரயங்களை ஒருபொழுதும் செய்யக்கூடாது. யாருக்கும் கடன் கொடுக்க கூடாது! கடன் வாங்கவும் கூடாது. தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவைகளை செய்து, செய்ய தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து வளம் பெறுவோம்.
தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டிய தானங்கள்? கட்டாயம் செய்ய கூடாத செயல்கள் என்ன?
Previous Articleமனைவி மீது கணவருக்கு ஆசை குறைய காரணங்கள்
Next Article Locations To Meet Women In The Modern Age group